மெல்ல மீண்டெழுகிறேன். காலத்தின் பிடியிலிருந்து ...........

Wednesday, 16 November 2016

நாலு வீட்டுல கல்யாணம் நாய்க்கு அங்கிட்டு ஓட்டம் இங்கிட்டு ஓட்டம்

"மானங்கெட்ட நாயி நேத்து வந்த ஈனங்கெட்ட நாய எட்டி எட்டி பாத்துதாம்"

நாய்க்கு வேலையும் இல்லை நிற்க நேரமும் இல்லை !

கோழி களவாணிப்பய குடம் கிடைச்சா விடுவானா’ 

பணியாரம் சுட்ட வீட்டுக்கு பத்துவாட்டி போனாளாம் அவளும் வெக்கப்பட்டு ஒண்ணு கொடுத்தாளாம்” 

“கூரை ஏறி கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்’

 உழக்கு அரிசி அன்னதானம் விடிய விடிய மேள தாளம்’

அடிச்சுப்புடுங்குறவன் கண்டெடுத்தாக் குடுப்பானா’

எள்ளு எண்ணெய்க்குக் காயுது எலிப்புழுக்கை எதுக்குக் காயுது

நாலு வீட்டுல கல்யாணம் நாய்க்கு அங்கிட்டு ஓட்டம் இங்கிட்டு ஓட்டம்

தட்டிப்போட்ட ரொட்டி- புரட்டிப்போட நாதியில்லை

‘அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லே உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லே’

“ குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டுக்கிட்டேன் மலடுன்னு இல்லாம பிள்ளப்பெத்துக்கிட்டேன்”

‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்

‘பேச்சுப்படிச்ச நாயி வேட்டைக்கு உதவாது’ 



Latest ஆன சொலவடைகள் என்று பார்த்தால்
’சாமியே சைக்கிள்லே போகுது
பூசாரி புல்லட் கேட்டானாம்’
கஞ்சிக்கு லாட்டரி

கைக்கு பேட்டரியா

No comments:

Post a Comment