மெல்ல மீண்டெழுகிறேன். காலத்தின் பிடியிலிருந்து ...........

Tuesday, 15 November 2016

அவள், பிறந்தநாள்

அன்னை பிறந்தநாள்-இவ்வுலகில்
அன்பு பிறந்த நாள்
 தந்தை பிறந்தநாள்-இவ்வுலகில்
அறிவு பிறந்த நாள்

நண்பன் பிறந்தநாள்-இவ்வுலகில்
உண்மை பிறந்த நாள்
உறவு பிறந்தநாள்-இவ்வுலகில்
பாச உணர்வு பிறந்த நாள்

மலர்கள் பிறந்தநாள்-இவ்வுலகில்
நறுமணம் பிறந்த நாள்
அமைதி பிறந்தநாள்-இவ்வுலகில்
மகிழ்ச்சி பிறந்த நாள்

அழகு பிறந்தநாள்-இவ்வுலகில்
ஆசை பிறந்தநாள்
கலை பிறந்தநாள்-இவ்வுலகில்
காதல் பிறந்த நாள்

காதல் பிறந்தநாள்-இவ்வுலகில்
கவிதை பிறந்த நாள் 
அவள் பிறந்தநாள்-எனக்கு 
வாழ்வில் இவையெல்லாம் பிறந்த நாள்...

No comments:

Post a Comment