மெல்ல மீண்டெழுகிறேன். காலத்தின் பிடியிலிருந்து ...........

Saturday, 22 August 2015

தாத்தனின் நாட்குறிப்பிலிருந்து...
சாபங்களைச் சுமந்துகொண்டே
சுகமாயிருப்பதாய்
சோடனைகள்.

வேர்களை அழிக்க
விஞ்ஞானத் தேடல்
நிழலில் நின்றுகொண்டே.

பலவீனங்கள்தான் பலமாகவும்
பலமே பலவீனமாகவும்
தைரியமில்லா
நாகரீகக் கோமாளிகள்.

எதுவானபோனதும்
தாத்தாவின் வீபூதிக்குடுவைக்குள்
மஞ்சள் பூசிய துணியில்
ஒற்றை ரூபா நேர்த்திக்கடனாய்.

வியர்வை துடைக்கும் மரங்கள்
விட்டெறிந்த பெருமூச்சில்
பட்டைகள் வெடித்து
தெறித்த குருதியில்
குழந்தைகள்
மூன்றாம் கையாய்
நான்காம் காலாய்.


"
பூவரச மரங்களை
பூக்கவிடு
என் கல்லறை சுற்றி"






தாத்தனின் நாட்குறிப்பிலிருந்து!!! 

••• 

No comments:

Post a Comment